கொழும்பு புறநகர் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை
8 தை 2024 திங்கள் 11:19 | பார்வைகள் : 5941
ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து கைத்தொழில் வலயத்தில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சூரிய ஒளி சரியாக இருந்தால் இந்நிலை தவிர்க்கப்படும் எனவும், அதுவரை முகக்கவசங்களை முறையாக அணிந்து செயற்படுமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் மூச்சு விடுவதில் சிரமம் உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்த ரசாயன தொழிற்சாலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 17ம் திகதி இரவு தீ விபத்து ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan