T2 ட்ராமுடன் மோதிய பேருந்து!

7 மாசி 2024 புதன் 10:00 | பார்வைகள் : 9620
பேருந்து ஒன்று T2 ட்ராமுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இன்று பெப்ரவரி 7, புதன்கிழமை காலை இந்த விபத்து இடம்பெற்றது.
Charlebourg மற்றும் La Défense நிறுத்தங்களுக்கிடையே பயணித்துக்கொண்டிருந்த ட்ராமுடன், 165 ஆம் இலக்க பேருந்து ஒன்று மோதியது. காலை 6.20 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றது.
விபத்தின் போது பேருந்தில் சாரதியை தவிர பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும், சாரதி சிறிய காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. ட்ராம் சேவைகளுக்காக மாற்று வழி பேருந்து சேவைகள் இயங்கப்பட்டிருந்தன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1