Paristamil Navigation Paristamil advert login

மக்ரோன் தம்பதிகளுக்கு இரண்டு நாய்களை பரிசளித்த கஸகஸ்தான் ஜனாதிபதி!!

மக்ரோன் தம்பதிகளுக்கு இரண்டு நாய்களை பரிசளித்த கஸகஸ்தான் ஜனாதிபதி!!

7 மாசி 2024 புதன் 10:39 | பார்வைகள் : 7507


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜித் மக்ரோன் கடந்த வருடம் கஸகஸ்தான் (Kazakhstan) சென்றிருந்த போது அவருக்கு இரவு நாய்கள் பரிசளிக்கப்பட்டிருந்தன. 

ஜனாதிபதி மக்ரோனிடம் Nemo எனும் வளர்ப்பு நாய் இருப்பது அறிந்ததே. தற்போது அதனுடன் மேலும் இரு நாய்கள் இணைந்துள்ளன. கடந்த நவம்பர் மாதம் மக்ரோன் தம்பதியினர் கஸ்கஸ்தான் சென்றிருந்தனர். அதன் போது அந்நாட்டு ஜனாதிபதி Kassym-Jomart Tokaïev, மக்ரோன் தம்பதியினருக்கு இரண்டு நாய்களை பரிசளித்தார். Jules மற்றும் Jeanne என அதற்கு பெயரிடப்பட்டுள்ளது.

Tazi greyhounds இனத்தைச் சேர்ந்த நாய்களே பரிசளிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பான செய்தியினை Le Parisien ஊடகம் வெளியிட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்