பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி
7 மாசி 2024 புதன் 11:20 | பார்வைகள் : 3574
பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.
20 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமுற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானில் நாளை 8ஆம் திகதி பெப்ரவரி 2024 பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
தேர்தல் திகதி அறிவித்த நாளில் இருந்து, ஆங்காங்கே குண்டு வெடிப்பு மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது.
பல்வேறு இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் மாவட்டத்தில், இன்று 07 ஆம் திகதி சுயேச்சை தேர்தல் வேட்பாளரின் அலுவலகம் அருகே குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. ஒரு வேட்பாளரின் அலுவலகத்தை குறி வைத்து, குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.