ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்கள்! - தேசிய அஞ்சலி நிகழ்வில் மக்ரோன் இரங்கல்!
7 மாசி 2024 புதன் 11:39 | பார்வைகள் : 2752
ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரெஞ்சு மக்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வு தற்போது Invalides பகுதியில் இடம்பெற்று வருகிறது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 42 பிரெஞ்சு மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களின் புகைப்படங்களை தாங்கி அணிவகுத்துச் சென்ற இராணுவ வீரர்கள், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், பிரதமர் கேப்ரியல் அத்தால் அவர்களுடன் மேலும் பல தலைவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் என பலர் சூழ்ந்திருக்க அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
கலாச்சார அமைச்சர், பொருளாதார அமைச்சர், உள்துறை அமைச்சர், சுகாதார அமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்களும் இந்த அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சிறப்பு அஞ்சலி உரை நிகழ்த்தினார்.
அதன் போது, ‘கொல்லப்பட்ட மக்களுக்காக 68 மில்லியன் மக்கள் துக்கம் அனுஷ்டிக்கின்றனர்!” என தெரிவித்தார்.