Paristamil Navigation Paristamil advert login

"நமது நூற்றாண்டின் மிகப்பெரிய யூத எதிர்ப்பு படுகொலை!” - அஞ்சலி நிகழ்வில் மக்ரோன்!

7 மாசி 2024 புதன் 13:48 | பார்வைகள் : 2498


ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில்ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர். அவர்களில் 42 பிரெஞ்சு மக்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை Invalides  பகுதியில் இடம்பெற்றது. 

அதன் போது ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இரங்கல் செய்தி வெளியிட்டார். அதில்  "நமது நூற்றாண்டின் மிகப்பெரிய யூத எதிர்ப்பு படுகொலை!” என தெரிவித்தார். 

அனைத்து உயிர்களும் சமம் என தெரிவித்த அவர், "பழிவாங்கும் மனப்பான்மை நம்மில் வளர ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது!’ எனவும் தெரிவித்தார். 

அதேவேளை, இதுவரை நான்கு பிரெஞ்சு நபர்கள் தொடர்பில் தகவல்கள் இல்லை. அவர்களை உயிருடன் மீட்க தேவையான அனைத்தையும் நாம் செய்வோம் எனவும், மத்திய கிழக்கில் உள்ள அனைவரின் பாதுகாப்புக்காக பணியாற்றுவோம்!” எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்