பெல்ஜியத்தில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்ட பயங்கரவாதி!!
7 மாசி 2024 புதன் 16:10 | பார்வைகள் : 4053
பயங்கரவாதி சாலா அப்தெஸ்லாம் பெல்ஜியத்தில் இருந்து பிரான்சுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் நேரடி தொடர்பில் உள்ள பயங்கரவாதி சாலா அப்தெஸ்லாம், பெல்ஜியத்தின் நீதிபதிகளால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். இதற்காக பிரான்சில் இருந்து பெல்ஜியத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், பெப்ரவரி 7, இன்று புதன்கிழமை காலை 9 மணிக்கு பெல்ஜியத்தின் சிறையில் இருந்து அவர் பிரான்சுக்கு பலத்த பாதுகாப்போடு அனுப்பி வைக்கப்பட்டார். இதனை சாலா அப்தெஸ்லாம் வழக்கறிஞர் Delphine Paci தெரிவித்தார்.
நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
பயங்கரவாத தாக்குதலின் பின்னர் சாலா அப்தெஸ்லாம் பெல்ஜியத்துக்கு தப்பிச் சென்று அங்கு பெல்ஜிய காடுகளில் பதுங்கியிருந்த நிலையில், பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய அதிரடிப்படையினர் இணைந்து தாக்குதல் மேற்கொண்டு அப்தெஸ்லாமைக் கைது செய்திருந்தனர்.