வாகெடுப்பு ஒன்றுக்கு €400,000 யூரோக்கள் செலவிட்ட பரிஸ் நகரசபை! - விமர்சனம்!!
7 மாசி 2024 புதன் 16:59 | பார்வைகள் : 3338
பரிசில் SUV வாகனங்களுக்கான தரிப்பிடக்கட்டணங்களை மூன்று மடங்கு அதிகரிப்பது தொடர்பில் பரிஸ் நகரசபை வாக்கெடுப்பு ஒன்றை கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டிருந்தது.
முப்பதிற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்து, பல நூறுபேரினை பணிக்கு அமர்த்தி இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 1.3 மில்லியன் பேருக்காக அமைக்கப்பட்ட இந்த வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 78,000 பேர் பங்கேற்று வாக்களித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்புக்காக பரிஸ் நகரசபை €400,000 யூரோக்கள் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையினை பரிஸ் நகரசபை செலவிட்டுள்ளமை தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
வாக்காளர் ஒருவருக்கு கிட்டத்தட்ட €5 யூரோக்கள் வீத செலவிடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்று வழியில் வாக்கெடுப்பினை நிகழ்த்தியிருக்கலாம் எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.