Paristamil Navigation Paristamil advert login

விரைவாக முதுமை தோற்றத்தை உண்டாக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?

விரைவாக முதுமை தோற்றத்தை உண்டாக்கும் உணவுகள் பற்றி தெரியுமா?

31 ஆடி 2023 திங்கள் 08:19 | பார்வைகள் : 3061


வயதிற்கும், தோற்றத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையில் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம். இளம் வயதிலேயே தலைமுடி நரைப்பது, தோல் சுருக்கம் ஏற்படுவது, முதுமை தோற்றம் எட்டிப்பார்ப்பது என இந்த காலத்து இளைஞர்கள், பல பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். இவை அனைத்திற்கும், அவர்களது தவறான உணவு பழக்கம் முக்கிய காரணமாகிறது. குறிப்பாக துரித உணவு கலாசாரம் மற்றும் மேலை நாடுகளின் உணவு பழக்க வழக்க தாக்கத்தினால், ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொண்டு உடலையும், இளமையையும் பாழ்படுத்திக் கொள்கிறார்கள். 
அந்தவகையில், இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை உண்டாக்கும் சில உணவுகளைப் பற்றி தெரிந்து கொள்வோம். இவற்றை தவிர்ப்பதன் மூலம், செயற்கையாக உருவாகும் முதுமை தோற்றத்தை தவிர்க்கலாம்.

1. குளிர்பானங்கள் குளிர்பானங்கள் கொஞ்சமாக குடித்தாலும் சரி, நிறைய குடித்தாலும் சரி அதன் மூலம் பாதிப்பு ஏற்படுவது உறுதி தான். இந்த குளிர்பானங்களை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள நீர் வற்றி, சருமம் பாதிக்கப்படும். இதனால் விரைவில் வயதான தோற்றம் ஏற்படும்.

2. துரித உணவு தோல் பளபளப்பாக இருப்பதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், நமது உடலின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதே. ஆனால், பாஸ்ட் புட், பீட்சா, பர்க்கர் போன்ற துரித உணவுகளை சாப்பிட்டால், கொழுப்பு அதிகமாகி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனாலும் வயதான தோற்றம், வெகுவிரைவிலேயே ஏற்படும்.

3. இறைச்சி அதிக அளவில் இறைச்சி மட்டும் உட்கொள்வதால் உடலில் நச்சுகள் குவிந்து கொழுப்பு அதி கரிக்கிறது. இதனால் வைட்டமின் டி சத்து குறைந்து முதுமை நிலையை, இளமையிலேயே அடைகிறீர்கள்.

4. உப்பு உப்பில்லாத பண்டம் குப்பையிலே என்று சொல்வார்கள். ஆனால், உப்பு அதிகமாக சேர்த்துக்கொண்டாலும் அது ஆபத்து தான். உப்பு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். இதன்காரணமாக, தோலின் இறுக்கமான தன்மை சுருங்கி வயதானவர்கள் போன்ற தோற்றம் விரைவில் ஏற்படும்.

5. மதுபானங்கள் அழகாகவும், இளமையாகவும் காட்சி அளிக்கும் பிரபலங்கள், பிறருக்கு தரும் முதல் டிப்ஸ் என்னவென்றால், அதிக தண்ணீர் குடியுங்கள் என்பதே. ஆம், மது அருந்துபவர்களுக்கு அதிகமாக தண்ணீர் இழப்பு ஏற்படும். இதனால், விரைவிலேயே தோல் பாதிக்கப்பட்டு, வயதானவர்கள் போன்ற தோற்றத்தை பெறுவார்கள்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்