மிக அரிதான goldfinches பறவைகளை கடத்திய இருவர் கைது!

8 மாசி 2024 வியாழன் 07:18 | பார்வைகள் : 6891
அழிந்து வரும் பறவை இனமான ’goldfinches’ இனைக் கடத்திச் சென்ற இருவரை மார்செய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய தரைக்கடல் நாடுகளைச் சேர்ந்த இந்த பறவை இனத்தை இருவர் கடந்த ஜனவரி மாத கடத்தி சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். மார்செய் மாவட்டத்தின் 11 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் காவல்துறையினரின் உதவியோடு நுழைந்த பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு (l’office français de la biodiversité) அங்கிருந்த இருவரைக் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த ஏழு goldfinches பறவைகளை மீட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளன்ர்.