Paristamil Navigation Paristamil advert login

வியட்நாமில் ஒரு மணித்தியாலத்துக்குள் 5 முறை நிலநடுக்கம்...

வியட்நாமில் ஒரு மணித்தியாலத்துக்குள் 5 முறை நிலநடுக்கம்...

8 மாசி 2024 வியாழன் 08:36 | பார்வைகள் : 2471


வியட்நாம் - மத்திய ஹைலேண்ட் மாகாணமான கோன் தும் பகுதியில் உள்ள கோன் ப்லாங் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 07-02-2024 பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை நேரப்படி காலை 8.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ஒரு மணித்தியாலத்திற்குள் தொடர்ந்து 5 முறை ஏற்பட்டதாக பதிவாகியுள்ளது. 

இந்த நிலநடுக்கங்கள் முறையே 4.0, 3.3, 2.8, 2.5, மற்றும் 3.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து 5 முறை ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்