Paristamil Navigation Paristamil advert login

ஓட்ஸ் குழிப்பணியாரம்

ஓட்ஸ் குழிப்பணியாரம்

31 ஆடி 2023 திங்கள் 08:38 | பார்வைகள் : 4035


ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது. ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் - 1 கப் 
தண்ணீர் - 1 1/2 கப் 
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி வெங்காயம் - 1 
பச்சை மிளகாய் - 1 
இஞ்சி - சிறிய துண்டு 
கேரட் - 1 
முட்டைகோஸ் - சிறிய துண்டு 
சீரகம் - 1/2 தேக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி கொத்தமல்லி இலை - சிறிதளவு 
உப்பு - 1 தேக்கரண்டி 
நெய் - தேவையான அளவு

செய்முறை:  

கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.  

வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.  அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ், சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.  

பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.

இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்