Paristamil Navigation Paristamil advert login

ஈரான்  செல்லும்  சுற்றுலா பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

ஈரான்  செல்லும்  சுற்றுலா பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

8 மாசி 2024 வியாழன் 09:48 | பார்வைகள் : 2098


ஈரான் நாட்டில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசாங்கம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்தியர்கள் விசா இல்லாமல் பயணம் செய்யும் நடைமுறை, 4 நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 4-ம் திகதி முதல் அமுலுக்கு வந்திருப்பதாக ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.

அதாவது சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

சாதாரண கடவுச்சீட்டை வைத்திருக்கும் நபர்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் விசா இல்லாமல் ஈரான் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். 

அப்படி வரும்போது அதிகபட்சமாக 15 நாட்கள் தங்கலாம். 

எந்த காரணத்தைக் கொண்டும் 15 நாட்களுக்கு பிறகு கால நீட்டிப்பு கிடையாது. 

விசா இன்றி பயணம் என்ற நடைமுறையானது, சுற்றுலா வருவோருக்கு மட்டுமே பொருந்தும்.

அனுமதிக்கப்பட்ட நாட்களை விட அதிக காலம் ஈரானில் தங்குவதற்கு விரும்பினாலோ அல்லது 6 மாத காலத்திற்குள் பல முறை வர விரும்பினாலோ அதற்கான உரிய விசா பெற வேண்டும்.
 
விசா இல்லாமல் வரலாம் என்ற இந்த அறிவிப்பு வான் எல்லை வழியாக ஈரான் நுழையும் இந்தியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்