ஹமாஸ் அமைப்பின் மீது கனடாவின் அதிரடி நடவடிக்கை
8 மாசி 2024 வியாழன் 09:58 | பார்வைகள் : 3202
ஹமாஸ் அமைப்பின் சில முக்கிய பிரமுகர்கள் மீது கனடா தடைகளை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் பத்து பேருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பின் சில சிரேஸ்ட உறுப்பினர்கள் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் அமைப்பு ஓர் பயங்கரவாத இயக்கம் என வெளிவிவகார அமைச்சர் ஜோலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைப்பின் சிரேஸ்ட தலைவர் யஹய்யா சின்வார் மீதும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.