Paristamil Navigation Paristamil advert login

'Paris 24' ஒலிம்பிக்,பராலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளை பார்க்க 15€ யூரோக்களில் நுழைவு சீட்டுகள்.

'Paris 24' ஒலிம்பிக்,பராலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளை பார்க்க 15€ யூரோக்களில் நுழைவு சீட்டுகள்.

8 மாசி 2024 வியாழன் 10:01 | பார்வைகள் : 8236


வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை பரிசில் நடைபெறவுள்ள 
ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை நீங்கள் இன்னும் பெறவில்லை என்றால், இன்று வியாழக்கிழமை முதல் ஒலிம்பிக் மற்றும் பராலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை காண்பதற்கான நுழைவுச் சீட்டுக்கள் மலிவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்றுவரை விற்கப்படாமல் உள்ள சுமார் 2 மில்லியன் நுழைவுச்சீட்டுகளை, அந்தந்த இடத்திற்கும், அந்தந்த  போட்டிகளுக்கும்அமைய மிக குறைந்த விலையாக 15€ யூரோக்களில் இருந்து 100€ யூரோக்களுக்கு குறைவான விலையில் விற்கப்படவுள்ளது என 'Paris 24' ஒலிம்பிக் விளையாட்டு உத்தியோகபூர்வ குழு அறிவித்துள்ளது.

குறித்த மலிவான நுழைவுச்சீட்டுகளை தங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் 'ஒன்லைனில்' மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும், முற்கூட்டியே முன் பதிவு செய்வதற்கு மட்டுமே முதல் உரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்