Paristamil Navigation Paristamil advert login

ஈஃபிள் கோபுரத்தின் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்கள்!

ஈஃபிள் கோபுரத்தின் துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் பதக்கங்கள்!

8 மாசி 2024 வியாழன் 11:27 | பார்வைகள் : 7056


இவ்வருடம் இடம்பெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது வழங்கப்பட உள்ள பதக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களும் ஈஃபிள் கோபுரத்தில் எடுக்கப்பட்ட துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.  ஈ8ஃபிள் கோபுரத்தின் இரும்பினை 'அறுகோண' வடிவில் பதக்கங்களுக்கு நடுவே பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக 5,084  பதக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றின் புகைப்படங்களை ஒலிம்பிக் குழு (Comité international olympique)  இன்று வெளியிட்டுள்ளது.

அதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்காக இடம்பெறும் பாரா-ஒலிம்பிக் போட்டிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள பதக்கங்களும் அதேபோல் ஈஃபிள் கோபுரத்தின் இரும்பு துண்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது.  ஈஃபிள் கோபுரத்தை கழுகு பார்வையினால் பார்க்கும் போது அது தெரியும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. (புகைப்படத்தில் பார்க்க) 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்