இலங்கையில் போதைப்பொருள் இல்லாததால் நபர் செய்த அதிர்ச்சி செயல்
8 மாசி 2024 வியாழன் 11:30 | பார்வைகள் : 6342
குருணாகல் பஸ் நிலையத்திற்கு அருகில் தன்னைத்தானே கத்தியால் குத்தி காயப்படுத்திய ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காயமடைந்தவர் குருணாகல் பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
இவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் அதனை உட்கொள்வதற்காக தன்வசம் போதைப்பொருள் இல்லாத காரணத்தினால் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளை கத்தியால் குத்தி தன்னைத்தானே காயப்படுத்தியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபருக்கு எதிராக பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 13 குற்றச்சாட்டுகள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குருணாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan