Paristamil Navigation Paristamil advert login

 ஆளில்லா விமானதாக்குதலில் பலியாகிய  ஈரானின் முக்கிய தளபதி 

 ஆளில்லா விமானதாக்குதலில் பலியாகிய  ஈரானின் முக்கிய தளபதி 

8 மாசி 2024 வியாழன் 12:31 | பார்வைகள் : 3076

அமெரிக்கா  ஆளில்லா விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இந்த தாக்குதலில் ஈரான்சார்பு ஆயுதகுழுவின் அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதி கொல்லப்பட்டுள்ளதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். 

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியில் சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அதேவேளை பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

அதோடு பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. 

மேலும் இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்