Paristamil Navigation Paristamil advert login

தயாரிப்பாளராக மாறிய பிக்பாஸ் நடிகை..

தயாரிப்பாளராக மாறிய பிக்பாஸ் நடிகை..

8 மாசி 2024 வியாழன் 13:30 | பார்வைகள் : 3908


நடிகையும், பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சனம் ஷெட்டி, திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளதாக அறிவித்துள்ளதோடு இது குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நடிகை சனம் ஷெட்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘அம்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அதன் பின்னர் அவர் ’மாயை’ ’தொட்டா விடாது’ ’கதம் கதம்’ ’வெள்ளையாய் இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ உட்பட சில படங்களில் நடித்தார்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 63 நாட்கள் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் அவருக்கு சினிமாவில் கிடைக்காத நிலையில் தற்போது அவர் தயாரிப்பாளராக உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘க்ளெய்ம் கல்ட்சர்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும் இது உங்கள் அன்பினால் சாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார். முதல் கட்டமாக மியூசிக் ஆல்பங்கள் மற்றும் குறும்படங்கள் யூடியூப் பிளாட்பாரத்திற்கு தயாரிக்க உள்ளதாகவும் அதனை அடுத்து அடுத்த கட்டத்திற்கு தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை கொண்டு போக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சனம் ஷெட்டியின் இந்த அறிவிப்பை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்