Paristamil Navigation Paristamil advert login

24 மணித்தியாலமும் ஸ்மார்ட்போன் உங்களை ஒட்டுக் கேட்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி தடுப்பது?

24 மணித்தியாலமும் ஸ்மார்ட்போன் உங்களை ஒட்டுக் கேட்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி தடுப்பது?

31 ஆடி 2023 திங்கள் 09:27 | பார்வைகள் : 4455


உங்கள் ஸ்மார்ட்போன் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை 24 மணி நேரமும் கேட்டு கொண்டு இருக்கிறது என்பது தெரியுமா? அதை தடுப்பது எப்படி என்பது குறித்தே இந்த கட்டுரை.

உங்கள் ஸ்மார்ட்போன் நீங்கள் பேசும் அனைத்தையும் ஒட்டுக் கேட்டு கொண்டு இருக்கிறது என்றால் அது எப்படி என்று தானே உங்களுக்குள் முதல் கேள்வி உருவாகும், அது வேறு எப்படியும் இல்லை உங்கள் போன்களில் உள்ள Siri, Google Assistant, Cortana போன்ற வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் செயலிகளால் தான்.

இந்த வாய்ஸ் விர்ச்சுவல் அசிஸ்டென்ட் செயலிகள் வேக் வார்ட்ஸ் எனப்படும் சில வார்த்தைகளுக்கு பதிலளிக்கின்றனர், எனவே இவை எப்போதும் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் உங்கள் போனில் உள்ள மைக்ரோபோனின் உதவியுடன் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இதே போல வேறு சில செயலிகளும் உதாரணமாக வீடியோ மற்றும் ஆடியோ அழைப்பு வசதிகளை உள்ளடக்கிய Facebook, Instagram மற்றும் Whatsapp போன்ற செயலிகளும் நீங்கள் பேசிக் கொண்டு இருப்பதை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

இத்தகைய செயலிகளை இன்ஸ்டால் செய்யும் போது மைக்ரோபோனை செயல்படுத்தும் அனுமதியை நம்மிடம் இருந்து லாபகமாக இந்த செயலிகள் பெற்றுக் கொள்கிறது.

நீங்கள் எந்தவொரு செயலியை இன்ஸ்டால் செய்யும் போது தேவையில்லாத செயலிகளுக்கு மைக்ரோபோன் அணுகல் அனுமதியை வழங்காதீர்கள்.

ஏற்கனவே நீங்கள் இவ்வாறான செயலிகளுக்கு அணுகல் அனுமதி கொடுத்து இருந்தால் மொபைல் செட்டிங்கிற்குள் சென்று அந்த அணுகல் அனுமதியை நீக்கி விடலாம்.

ஆண்ட்ராய்டு பயனர்கள்
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் :
Settings -> Apps -> General -> Assistant -> See all Assistant Settings -> Turn Off “Hey Google”

பிற செயலிகளுக்கு:
Settings -> Apps -> permission ->microphone -> select the app -> turn off the microphone

ஐபோன் பயனர்கள்:
விர்ச்சுவல் அசிஸ்டென்ட் :
Settings -> Siri & Search -> Turn Off “Listen for Hey Siri”

பிற செயலிகளுக்கு:
Settings -> Privacy & Security ->microphone -> select the app -> turn off the microphone

 

வர்த்தக‌ விளம்பரங்கள்