Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சிக்கும் வெள்ளை மாளிகை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சிக்கும் வெள்ளை மாளிகை

9 மாசி 2024 வெள்ளி 09:03 | பார்வைகள் : 2492


ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சொல்வதை நம்ப வேண்டாம் என அமெரிக்கர்களிடம் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளரான டக்கர் கார்ல்சன், உக்ரேனுக்கு அமெரிக்க இராணுவ உதவியை எதிர்த்து குரல் கொடுத்தவர் ஆவார்.

இவர், இந்த வார தொடக்கத்தில் கிரெம்ளினை விட்டு வெளியேறியதைத் தொடர்ந்து ரஷ்ய ஜனாதிபதி புடினை நேர்காணல் செய்யப்போவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி (john kirby) செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவர், ''அந்த நேர்காணலைப் பார்க்கும் (புடின் - கார்ல்சன் நேர்காணல்) எவரும் விளாடிமிர் புடின் கூறும் எதையும் நம்பக் கூடாது.

அமெரிக்க மக்களுக்கு இங்கு யார் தவறு என்று நன்றாக தெரியும். மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, படையெடுப்பிற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பது அவர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறன்.

யாருக்கும் அச்சுத்தல் தராத அண்டை நாடான உக்ரைனை அவர் ஆக்கிரமித்தார்.

உக்ரைன் எதற்காக போராடுகிறது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்துகொள்கிறார்கள்' என தெரிவித்துள்ளார்.     

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்