Eurostar தொடருந்தில் ஏற முற்பட்ட அகதி - மின்சாரம் தாக்கி பலி!

9 மாசி 2024 வெள்ளி 13:22 | பார்வைகள் : 6944
Eurostar தொடருந்து மீறு ஏற முற்பட்ட அகதி ஒருவர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்.
பெப்ரவரி 8, வியாழக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Gare du Nord தொடருந்து நிலையத்துக்கு வருகை தந்த அகதி ஒருவர் தண்டவாளத்தைக் கடந்த EuroStar தொடருந்து தரித்து நின்ற பகுதிக்குச் சென்று, அதன் மீது ஏற முற்பட்டுள்ளார். அதன்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இரவு 10.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அகதி தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.