Paristamil Navigation Paristamil advert login

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை -  விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள்

ஐஸ்லாந்தில் வெடித்து சிதறிய எரிமலை -  விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள்

9 மாசி 2024 வெள்ளி 13:52 | பார்வைகள் : 7243


ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்தில் 30-க்கும் மேற்பட்ட செயல்படும் எரிமலைகள் அமைந்துள்ளன. 

அதில் கிரின்டாவிக் நகரில் உள்ள எரிமலை  திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. 

அப்போது அந்த எரிமலையில் இருந்து விண்ணை முட்டும் அளவுக்கு தீப்பிழம்புகள் வெளியேறின. 

இது சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு நெருப்பு குழம்புகளாக ஓடியது.

இதற்கிடையே அந்த பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 

இந்த சம்பவத்தால் மக்கள் சிறிது நேரம் பதற்றம் அடைந்தனர். 

இதன் சமீபத்திய எரிமலை வெடிப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்