மீண்டும் திருமண பந்தத்தில் இணையும் சமந்தா?

9 மாசி 2024 வெள்ளி 14:21 | பார்வைகள் : 6766
தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை, திருமணத்திற்கு பின் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைக்காது என்பதே உண்மை. ஆனால் அதை உடைத்தெறிந்த சமந்தா, பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார். குறிப்பாக திருமணத்திற்கு முன்பை விட, திருமணத்திற்கு பின்பு தான் சமந்தாவின் கிராப் எகிறியது.
இதுவே சமந்தா - நாகசைதன்யா இடையே பிரச்சனை வர காரணமாக அமைந்ததாகவும், இதன் காரணமாகவே சமந்தா விவாகரத்து பெற்று பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் உண்மையான காரணம் குறித்து இதுவரை, சாம் - சைதன்யா இருவருமே வாய் திறக்கவில்லை.
திருமணம் ஆன நான்கே வருடத்தில் கணவரிடம் இருந்து பிரிந்த சமந்தா... தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வந்த போது, அரியவை தசை சிதைவு நோயான 'மயோசிட்டிஸ்' பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். எழுந்து நடக்க கூட முடியாமல் அவதிப்பட்ட சமந்தா... அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து முடித்தார்.
மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக... சீட்டாடல் தொடரில் நடித்து முடிந்த பின் சிறு பிரேக் ஒன்றையும் எடுத்து கொண்டார் சமந்தா. தற்போது, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சமந்தாவுக்கு 32 வயது மட்டுமே அவதால், அவரின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ள சொல்லி ஒரு பக்கம் அழுத்தம் கொடுத்து வருகிறார்களாம்.
சமந்தாவுக்காக தங்களின் உறவினர் மகன் ஒருவரையே மாப்பிள்ளையாக பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு புறம் சமந்தா... முரட்டு சிங்கிளாக இருக்கும், வாரிசு நடிகர் ஒருவருடன் நெருக்கம் காட்டி வருகிறாராம். இவர்கள் இருவரின் சமந்தாவின் சாய்ஸ் யாராக இருந்தாலும்... அதனை ஏற்றுக்கொள்ள சமந்தாவின் ஃபேமிலி தயாராக உள்ளார்களாம். காரணம் எப்படியும் தன்னுடைய மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் எண்ணமாக உள்ளது தான் என கூறப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1