Paristamil Navigation Paristamil advert login

கொய்யா சட்னி

கொய்யா சட்னி

9 மாசி 2024 வெள்ளி 14:32 | பார்வைகள் : 4003


கொய்யாப்பழத்தைக் கொண்டு வீட்டிலேயே எப்படி எளிய செய்முறையில் சட்னி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் :

கொய்யாப்பழம் - 1

துருவிய தேங்காய் - 1/4 கப்

புளி - 1 சிறிய துண்டு

பெரிய வெங்காயம் - 2

பூண்டு - 3 பல்

பச்சை மிளகாய் - 2

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்

கடலைப் பருப்பு - 1 ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கிக்கொள்ளுங்கள்.

அடுத்து அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் புளியை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கிக்கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் ஓரளவிற்கு பொடியாக நறுக்கிவைத்துள்ள கொய்யாப்பழம் மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கடைசியாக அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து ஒருமுறை வதக்கி அடுப்பை அணைத்து கொள்ளுங்கள்.

தற்போது வதக்கி வைத்துள்ள பொருட்களை நன்றாக ஆறவைத்து கொள்ளுங்கள்.

அனைத்தும் நன்கு ஆறியவுடன் ஒரு மிக்சர் ஜாரில் போட்டு அதனுடன் உங்கள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து எடுத்தால் சுவையான கொய்யாப்பழ சட்னி தயார்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்