Paristamil Navigation Paristamil advert login

யாழில் 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

யாழில் 2 பெண்கள் உட்பட 4 பேர் அதிரடியாக கைது

1 ஆவணி 2023 செவ்வாய் 03:20 | பார்வைகள் : 7769


யாழ்.மானிப்பாய் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்