Telegram செயலி ஊடாக ஆபாசப்படங்களை விற்பனை செய்து வந்த 10 பேர் கைது!

10 மாசி 2024 சனி 07:00 | பார்வைகள் : 13514
Telegram செயலி ஊடாக ஆபாசப்படங்களை விற்பனை செய்த பத்து பேர் கொண்ட குழுவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த ஒருவருடகாலமாக இடம்பெற்று வந்த விசாரணைகளை அடுத்தே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழு Telegram செயலி ஊடாக பலரை தொடர்புகொண்டு ஆபாசப்படங்களை, குறிப்பாக சிறுவர்களின் ஆபாசப்படங்களை (pédopornographiques) விற்பனை செய்துள்ளனர்.
அவர்களிடம் 15,000 புகைப்படங்கள் இருந்ததாகவும், 50,000 யூரோக்கள் வரை அவர்கள் பணம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இல் து பிரான்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 10 பேர் ஒரே நாளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
பரிஸ் வழக்கறிஞர் அலுவலகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1