Paristamil Navigation Paristamil advert login

Hauts-de-Seine பகுதியில் முதலாளிக்கு மது பானத்தில் விஷம் வைத்த தொழிலாளி.

Hauts-de-Seine பகுதியில் முதலாளிக்கு மது பானத்தில் விஷம் வைத்த தொழிலாளி.

10 மாசி 2024 சனி 08:19 | பார்வைகள் : 2618


பரிசின் புறநகர்ப்பகுதியான Hauts-de-Seine பகுதியில் உள்ள levallois-Perret  என்னும் இடத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 3,5 மற்றும் 7 வயது குழந்தைகளை பராமரிக்கும் வீட்டுப் பணிப்பெண் வேலையைச் செய்து வந்த, பெண் ஒருவர், 'கொலை முயற்சி செய்ய முற்பட்டார்' எனும் குற்றத்திற்காக வழக்கை சந்தித்துள்ளார்.

தனது சம்பளத்தை உயர்த்தும் படி தன் முதலாளியிடம் தொடர்ச்சியாக கேட்டு வந்த அவர், தனது வேண்டுகோள் மறுக்கப்பட்டதை அடுத்து கோபமடைந்து  வீட்டில் உள்ள மதுபானங்களில், வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் மருந்துகளை கலந்து வைத்துள்ளார்.

மதுபானங்களில் வித்தியாசமான மணம் வருவதை உணர்ந்த முதலாளி சந்தேகம் அடைந்து விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது. இதனையடுத்து குறித்த பெண் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட போது, அவரிடம் இருந்த வதிவிடம் அனுமதிப் பத்திரம் வேறு ஒருவருடயது என்பதும், இவரின் வதிவிடம் அனுமதி பத்திரம் நிராகரிக்கப்பட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டியவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த பணிப்பெண் Hauts-de-Seine பகுதியில் உள்ள அரச வழக்கறிஞர் மன்றத்தினால் "கொலை முயற்சி மற்றும் வதிவிட பத்திர ஆள்மாறாட்டம் போன்ற இரு வழக்குகளை சந்தித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்