காய்ச்சல், தலைவலி போன்ற நோய்களின் நிவாரணி மருந்தான 'l'ibuprofène 400 mg' மருந்துக்கு தடை l'agence de sécurité sanitair.
10 மாசி 2024 சனி 08:21 | பார்வைகள் : 4267
கடந்த 2019 முதல் 'l'agence de sécurité sanitair' நிறுவனத்தால் மருந்தகங்களில் 'l'ibuprofène 400 mg' மருந்துகளை "காட்சிப் படுத்தி விற்பனை செய்யவேண்டாம்" என வலியுறுத்தப்பட்ட மருந்துகளை தொடர்ந்தும் "சிறந்த நிவாரணி" எனக்கூறி விளம்பரப்படுத்தப்பட்டுவதை எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முதல் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என l'agence de sécurité sanitair' நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் பரிந்துரை சீட்டுகள் இன்றி மருந்தகங்களில் எளிதாக வாங்கக்கூடிய 'l'ibuprofène 400 mg' மருந்துகள் காச்சல், உடல், தலைவலிகளுக்கு உடனடி நிவாரணமாக அமைந்தாலும் அதன் பக்கவிளைவுகள் குறிப்பாக இரைப்பை, செரிமானம், இரத்தப்போக்கு மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவை ஒரே நேரத்தில் அதிகரிக்க செய்கின்றன என l'agence de sécurité sanitair' நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே குறித்த மருந்தாக்கான விளம்பரங்கள் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், துண்டுப்பிரசுரங்கள் மூலம் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, நுகர்வோரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.