அஞ்சாதே பட நடிகர் காலமானார்!

10 மாசி 2024 சனி 08:43 | பார்வைகள் : 10461
அஞ்சாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ஸ்ரீதர் என்ற துணை நடிகர் மூச்சு திணறல் காரணமாக இரவு 1:30 மணிக்கு காலமானார்.
இவர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான அஞ்சாதே திரைப்படத்தில் கால் ஊனமுற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் தன் மகன் கண் முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்படும் கதாபாத்திரத்தை மிக எதார்த்தமாக நடித்திருந்தார். அவரின் அந்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
அது தவிர முதல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக இருமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் இன்று இரவு 1.30 மணி அளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு காலமானார். இவர் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025