Paristamil Navigation Paristamil advert login

தீக்குச்சிகளால் உருவாக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!

தீக்குச்சிகளால் உருவாக்கப்பட்ட ஈஃபிள் கோபுரம்! - கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது!

10 மாசி 2024 சனி 09:14 | பார்வைகள் : 1982


தீக்குச்சிகளால் உருவாக்கப்பட்ட எட்டு மீற்றர் உயரம் கொண்ட ஈஃபிள் கோபுரம், கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்தவாரத்தில் இதனை பார்வையிடச் சென்றிருந்த கின்னஸ் நிறுவனத்தினர், அதனை நிராகரித்திருந்தனர். தீக்குச்சிகள் முறைப்படி வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இந்த சாதனையை நிராகரித்திருந்த அவர்க்ள், தற்போது சாதனையை ஏற்றுக்கொண்டு கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.

Charente-Maritime மாவட்டத்தைச் சேர்ந்த Richard Paud என்பவர் கடந்த எட்டு ஆண்டுகாலமாக தனது உழைப்பைக் கொட்டி, இந்த 7.19 மீற்றர் உயரமுடைய ஈஃபிள் கோபுரத்தினை உருவாக்கியுள்ளார். இதற்காக 706,900 தீச்குச்சிகளை அவர் பயன்படுத்தியிருந்தார்.

”மிகச்சிறந்த செய்தி. நான் திருப்தியாக உணருகிறேன்” என கின்னஸ் சாதனை பதிவு செய்ததன் பின்னர் Richard Paud தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி ஆரம்பித்திருந்த இந்த ஈஃபிள் கோபுரம் அமைக்கும் பணி, டிசம்பர் 27, 2023 ஆம் ஆண்டு நிறைவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்