Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் கோர விபத்து -  இருவர் பலி

அமெரிக்காவில் கோர விபத்து -  இருவர் பலி

10 மாசி 2024 சனி 09:42 | பார்வைகள் : 5337


அமெரிக்காவில் தனியார் விமானம் ஒன்று தேசிய சாலையில் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில்  இரண்டு பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியள்ளது.

புளோரிடா மாகாணத்தில் the Bombardier Challenger 600 எனும் தனியார் விமானம் ஒன்று, நெடுஞ்சாலையில் கார்கள் மீது மோதி விபத்திற்குள்ளானது.

Naples-யின் Pine Ridge சாலைக்கு அருகிலுள்ள Collier கவுண்டி பகுதியில் நடந்த இந்த விபத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. 

இந்த விபத்தில் இருவர் பலியானதாக the Collier County Sheriff's அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் விபத்திற்குள்ளான தனியார் விமானம் தரையிறங்க தயாரானபோது, இரண்டு எஞ்சின்களும் செயலிழந்ததாக விமானி தெரிவித்திருந்தார். 

அத்துடன் விமானத்தில் 5 பேர் பயணித்ததாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ஓஹியோ மாநிலத்தில் இருந்து Naples விமான நிலையத்திற்கு அந்த விமானம் பயணித்ததாக Flight Aware தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விபத்து காரணமாக தெற்கு பகுதியை நோக்கி செல்லும் அனைத்து பாதைகளும் 24 மணிநேரத்தில் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த பொலிஸார் மற்றும் அவசர நடவடிக்கை உள்ளது.     


 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்