இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டம்: மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை
10 மாசி 2024 சனி 10:32 | பார்வைகள் : 2618
நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் உச்சநீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
அத்துடன், குறித்த சட்டமூலம் தொடர்பான அவதானிப்புகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பி வைத்துள்ளது.
குழுநிலை விவாதத்தின் போது சம்பந்தப்பட்ட சட்டத்தின் கிட்டத்தட்ட முப்பது பிரிவுகளை திருத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவ்வாறு செய்யப்படாவிடின் அது தொடர்பான சட்டமூலம் விசேட பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஆனால், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் திருத்தம் செய்யாமல் சட்டம் இயற்றப்பட்டிருப்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி, நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான மசோதா 46 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின.
பெப்ரவரி முதலாம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அந்த சட்டமூலத்திற்கு கையெழுத்திட்டு நடைமுறைக்கான அங்கீகாரம ்வழங்கினார்.
நிகழ்நிழலை பாதுகாப்பு மசோதா பிப்ரவரி 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வௌியிடப்பட்டது.