Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் புதிய சாதனை

1 ஆவணி 2023 செவ்வாய் 07:15 | பார்வைகள் : 6269


அல்-நஸர் எப்சி-மொனாஸ்டிர் அணிகளுக்கு இடையிலான போட்டி கிங் ஃபாட் மைதானத்தில் நடந்தது.

ஆட்டத்தின் முதல் பாதியின் 42வது நிமிடத்தில் அல்-நஸர் வீரர் தலிஸ்கா அசத்தலாக கோல் அடித்தார்.

இரண்டாம் பாதியில் அல்-நஸர் வீரர்கள் எதிரணியை கதிகலங்க வைத்தனர்.

ஆனால், 66வது நிமிடத்தில் அல்-நஸரின் அலி லஜமி, கோலை தடுக்க தலையால் முட்டியதில் எதிரணிக்கு கோலாக அமைந்துவிட்டது.

எனினும் நட்சத்திர வீரர் ரொனால்டோ, தன்னிடம் வந்த பந்தை (72வது நிமிடம்) தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

அதன் பின்னர் மற்றொரு அல்-நஸர் வீரர் அப்துலேல அல் அம்ரி, 88வது நிமிடத்தில் கோல் கீப்பர் அசந்த நேரத்தில் துரிதமாக செயல்பட்டு கோல் அடித்தார்.

அடுத்த 2 நிமிடங்களில் அதே அணியின் அப்துலாஜிஸ் சவுத் கோல் அடித்தார்.

இறுதியில் அல்-நஸர் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக கடந்த போட்டி கோல்கள் இல்லாமல் டிராவில் முடிந்தபோது, வெற்றிக்காக தொடர்ந்து போராடுவோம் என ரொனால்டோ கூறியிருந்தார்.

அவர் சொன்னதைப் போலவே இந்தப் போட்டியில் வெற்றி செய்து காட்டியுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் அல்-நஸர் அணி தனது பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.    

 

வர்த்தக‌ விளம்பரங்கள்