Paristamil Navigation Paristamil advert login

இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பஞ்சாபில் அனைத்து தொகுதியிலும் ஆம்ஆத்மி போட்டி

இண்டியா கூட்டணிக்கு பின்னடைவு: பஞ்சாபில் அனைத்து தொகுதியிலும் ஆம்ஆத்மி போட்டி

10 மாசி 2024 சனி 12:48 | பார்வைகள் : 1891


பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன்'' என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப் பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

கடந்த 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்த பா.ஜ., ஏப்ரலில் நடக்க இருக்கும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. பா.ஜ.,வுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைத்தால் மட்டுமே அக்கட்சியை தேர்தலில் வீழ்த்த முடியும் என பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இண்டியா கூட்டணியை உருவாக்கியது. 

வரும் லோக்சபா தேர்தலில் தொகுதி பங்கீடு விஷயத்தில் உரசல் இருந்து வருகிறது. குறிப்பாக, மேற்கு வங்கம், டில்லி, பஞ்சாப், கேரள மாநிலங்களில் இந்த உரசல் வலுத்து மோதல் நிலைக்கு வந்தது. மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் திரிணமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என முதல்வர் மம்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன் என டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இண்டியா கூட்டணி கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து பஞ்சாபில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கெஜ்ரிவால் பேசியதாவது: இரண்டு ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் நடந்த சட்டசபை தேர்தலில் 117ல் 92 இடங்களில் எங்களுக்கு வெற்றியை கொடுத்தீர்கள். ஆம்ஆத்மி அதிக இடங்களை பிடித்து சரித்திரம் படைத்தது. </p><p>இரண்டு மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும். 

சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும், பஞ்சாபில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும். 15 நாளில் வேட்பாளர்களை அறிவிப்பேன்.  பஞ்சாபில் 13 தொகுதியிலும், சத்தீஸ்கரில் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் ஆம்ஆத்மி வேட்பாளர்கள் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்ய வேண்டும். கடந்த 75 வருடங்களில் பல கட்சிகள் ஆட்சி செய்தாலும் ரேஷன் கடைகளில் நடந்த வந்த திருட்டை யாராலும் தடுக்க முடியவில்லை. இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்