மன்னாரில் தலைக்கவசத்தினுள் ஐஸ் போதைப்பொருள் - மறைத்து வைத்திருந்தவர் கைது

10 மாசி 2024 சனி 14:56 | பார்வைகள் : 6465
மன்னாரில் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நபரை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார், சாவட்காடு புனித அந்தோனியார் ஆலயப் பகுதியில், தலைக்கவசம் அணிந்திருந்த நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பரிசோதித்தபோது தலைக்கவசத்துக்குள் ஐஸ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
கைதானவரிடமிருந்து 20 கிராம் 850 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.
குறித்த நபர் போதைப்பொருளை வியாபாரத்துக்காக விடத்தல் தீவிலிருந்து மன்னாருக்கு கொண்டுசென்றதாக ஆரம்பகட்ட விசாரணையூடாக தெரியவந்துள்ளது.