பிரான்சின் கடற்கரைப் பகுதிகளில் பேரலை அபாயம்!!
10 மாசி 2024 சனி 17:04 | பார்வைகள் : 3191
பிரான்சின் பெரும் கடற்கரைப் பகுதிகளிற்கு இன்று வானிலை அவதானிப்பு மையம் பாரிய பேரலை ஆபத்தை எச்சரித்துள்ளது.
முக்கியமாக Pyrénées-Atlantique, Landes, Gironde, Charente-Maritime, Vendée, Loire-Atlantique, Morbihan, Finistère, Côtes-d'Armor, Ille-et-Vilaine, Manche ஆகிய கடற்கரைப் பகுதிகளில் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்தானியா நோக்கி கப்பலில் செல்லும் Manche கடற்பகுதியும் பேரலை அபாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளது.
அயர்லாந்தில் ஏற்பட்டுள்ள 'கார்லோட்டா' காற்றழுத்தம் மற்றும் புயற்காற்று, பிரித்தானியவைத் தாண்டி பிரான்சின் கடற்கரைப் பகுதியைத் தாக்குகின்றது.