Paristamil Navigation Paristamil advert login

Yvelines : நீச்சல் தடாகத்துக்குள் விழுந்த குதிரை! - 20 தீயணைப்பு படையினர் போராடி மீட்பு!

Yvelines : நீச்சல் தடாகத்துக்குள் விழுந்த குதிரை! - 20 தீயணைப்பு படையினர் போராடி மீட்பு!

10 மாசி 2024 சனி 17:43 | பார்வைகள் : 8896


குதிரை ஒன்று நீச்சல் தடாகம் ஒன்றில் தவறி விழுந்த நிலையில், பெரும் போராட்டத்துக்கு மத்தியில் அது மீட்கப்பட்டுள்ளது.

Essarts-le-Roi (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று பெப்ரவரி 9, வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அங்குள்ள தனியாருக்குச் சொந்தமான நீச்சல் தடாகம் ஒன்றில் 15 வயதுடைய ஆண் குதிரை ஒன்று தவறி விழுந்துள்ளது. அதனால் வெளிய வர முடியாமல் தவிக்க, தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர்.

20 தீயணைப்பு படையினர் களத்தில் போராடி குதிரையை மீட்டனர். கடும் குளிரான தண்ணீருக்குள் குதிரை உயிருக்கு போராடியதுடன், தீயணைப்பு வீரர்களும் போராடி, பாரம் தூக்கி ஒன்றுடன் இணைத்து குதிரைய மீட்டனர்.

குதிரைக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்