Paristamil Navigation Paristamil advert login

சீனாவை புரட்டிபோடும் டோக்கரி புயல்!

சீனாவை புரட்டிபோடும் டோக்கரி புயல்!

1 ஆவணி 2023 செவ்வாய் 07:57 | பார்வைகள் : 6407


சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனாவின் புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

குறித்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் பலத்த சேதமடைந்த நிலையில் சுமார் 6 ஆயிரம் எக்கர் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.

இதன்மூலம் அங்கு ரூ.493 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக சீன அரசாங்கம் கணித்துள்ளது.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்