Paristamil Navigation Paristamil advert login

விராட் கோலியின் 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல் முறை..!

விராட் கோலியின் 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவே முதல் முறை..!

11 மாசி 2024 ஞாயிறு 08:58 | பார்வைகள் : 1391


விராட் கோலியின் 13 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி ஒரு விடயம் நடந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் Run Machine என்று அழைக்கப்படும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, தனது நீண்ட டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு தொடரை தவறவிட்டார்.

2011-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதித்த கோலி, பல வருட பயணத்தில் முதல் முறையாக ஒரு முழு தொடரையும் இழக்கிறார்.

உள்நாட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஒரு பகுதியாக, கோஹ்லி தனிப்பட்ட காரணங்களால் முதல் இரண்டு டெஸ்டில் இருந்து விலகினார்.

மீதமுள்ள மூன்று டெஸ்ட்களுக்கான தேர்வுக்கு அவர் கிடைக்கவில்லை என்பது தெரிந்ததே.

13 ஆண்டுகளில் முதன்முறையாக, கோலி, உடற்தகுதி முதல் எல்லாம் சரியாக இருந்தும், ஒரு முழு தொடரையும் தவறவிட்டார்.

2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் நுழைந்ததில் இருந்து கோலி 113 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

2011 முதல் 2023 வரை சொந்த மண்ணில் மூன்று டெஸ்ட் போட்டிகளை மட்டும் தவறவிட்டார்.

2017-இல் பார்டர் - கவாஸ்கர் டிராபியின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட், 2018-இல் பெங்களூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் மற்றும் 2021-இல் நியூசிலாந்துக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் ஆகியவற்றில் அவர் விளையாடவில்லை. ஆனால் இப்போது முழு தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.

கோலி தனது அறிமுகத்திலிருந்து இந்த 13 ஆண்டுகளில் இந்தியா விளையாடிய அனைத்து டெஸ்டுகளிலும் (உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்) 13 டெஸ்ட்களை மட்டுமே தவறவிட்டார்.

உள்நாட்டில் மூன்று போட்டிகளை தவறவிட்ட கோலி, வெளிநாட்டில் பத்து போட்டிகளை தவறவிட்டார்.  

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்