பிலிப்பைன்ஸில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம்!
11 மாசி 2024 ஞாயிறு 09:09 | பார்வைகள் : 9741
பிலிப்பின்ஸின் மேகடாசனில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிலிப்பின்ஸின் மேகடாசனில் இருந்து 2 கி.மீ தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.4 அலகுகளாகப் பதிவானது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் உடமைச் சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், 'நெருப்பு வளையம்' என்றழைக்கப்படும் பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.


























Bons Plans
Annuaire
Scan