நான்கு மாதங்களில் இரண்டு தொன் போதைப்பொருள் மீட்பு! - 1,270 பேர் கைது!!

11 மாசி 2024 ஞாயிறு 10:08 | பார்வைகள் : 8229
கடந்த நான்கு மாதங்களில் பிரான்சில் இரண்டு தொன்னுக்கும் அதிகமான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்தார்.
இந்த நான்கு மாதங்களில் மொத்தமாக 155 போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்போது போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 1,270 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தொன் எடைக்கும் அதிகமாக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அத்தோடு இரண்டு மில்லியன் யூரோக்கள் பணமும், 300 வரையான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டிருந்தார். அதையடுத்தே மேற்படி தகவல்களை நேற்று சனிக்கிழமை உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.