Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை

இலங்கையில் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை

11 மாசி 2024 ஞாயிறு 10:11 | பார்வைகள் : 4427


மினுவாங்கொடை - யாகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கொள்ளையர் ஒருவர் வீட்டில் உள்ளவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் மூவர் அடங்கிய குழுவொன்று குறித்த வீட்டிற்குள் சொத்துக்களை கொள்ளையிடும் நோக்கில் நுழைந்துள்ளது.

இதன்போது வீட்டில் தங்கியிருந்த நபரொருவர் கொள்ளையர்களில் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மற்றைய இரு கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்