கனடாவில் அதிகரிக்கப்படும் தபால் கட்டணங்கள்
11 மாசி 2024 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 8809
கனடாவில் தபால் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக கனடிய தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
தபால் முத்திரைகளின் விலைகள் 7 சதத்தினால் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்கா மற்றும் சர்வதேச தபால் சேவை கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு தபால் மற்றும் பதிவுத் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மே மாதம் 6ம் திகதி முதல் இவ்வாறு கட்டண அதிகரிப்பு பதிவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
பணவீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள நிதிச் சுமையை கவனத்திற் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


























Bons Plans
Annuaire
Scan