Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் மனைவியின் ஆசையை நிறைவுற்றிய கணவருக்கு நேர்ந்த கதி

பிரித்தானியாவில் மனைவியின் ஆசையை நிறைவுற்றிய  கணவருக்கு நேர்ந்த கதி

1 ஆவணி 2023 செவ்வாய் 08:31 | பார்வைகள் : 2735


பிரித்தானியரான டேவிட் (David Hunter, 76), தன் மனைவியான ஜேனிஸ் (Janice Hunter, 74)உடன் சைப்ரஸ் நாட்டில் வாழ்ந்துவந்தார்.

தம்பதியருக்கு திருமணமாகி 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவந்துள்ளனர்.

இந்நிலையில், ஜேனிஸ் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

கடுமையான வலியால் அவதியுற்று வந்த ஜேனிஸ் தன் கணவரிடம் கோரிக்கை ஒன்றைவைத்தார்.

அது, தன் கணவரே தன் மூச்சை நிறுத்திவிடவேண்டும் என்பது ஆகும்.

2021ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம்.காதல் மனைவி படும் கஷ்டத்தை சகிக்க முடியாத டேவிட், மனைவியின் மூக்கையும் வாயையும் மூடி, அவரது மூச்சை நிறுத்திவிட்டார்.


டேவிடுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சைப்ரஸ் நாட்டில் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், நேற்று டேவிட் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

19 மாதங்கள் அவர் ஏற்கனவே சிறையில் செலவிட்டுவிட்டதால் அவர் விடுவிக்கப்பட்டதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் எவ்வளவு நேசித்தார்கள் என்பதும், மனைவியின் வேதனையைக் கண்டதாலேயே அவரது மூச்சை நிறுத்த டேவிட் சம்மதித்ததாகவும் நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது.

மனைவி உயிரிழந்ததும், டேவிடும் அதிக அளவில் மாத்திரைகளை எடுத்து தற்கொலை செய்துகொள்ள முயன்றிருந்தார்.

ஆனால், அவசர மருத்துவ உதவிக் குழுவினர் அவரைக் காப்பாற்றிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

வர்த்தக‌ விளம்பரங்கள்