பரிஸ் : காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க Canal Saint-Denis க்குள் பாய்ந்தவர் - மீட்பு!
12 மாசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 13900
தப்பிச் செல்ல முற்பட்ட ஒருவர் Canal Saint-Denisகுள் பாய்ந்த நிலையில், அவர் காவல்துறையினரால் மடக்கிப் பிடித்துள்ளனர். தலைநகர் பரிசில் இச்சம்பவம் சனிக்கிழமை காலை பரிசில் இடம்பெற்றுள்ளது.
19 ஆம் வட்டார காவல்துறையினர் சனிக்கிழமை காலை வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, Macdonald Boulevard முன்பாக உள்ள சிவப்பு சமிக்ஞை பகுதியில் மகிழுந்தை நிறுத்தாமல் ஒருவர் பயணித்துள்ளார். அவர் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குறித்த நபர் மதுபோதையிலும் இருந்துள்ளார். அவர் திடீரென காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க, அருகில் உள்ள Canal Saint-Denis ஆற்றுக்குள் பாய்ந்துள்ளார்.
பின்னர் மயக்கமுற்ற நிலையில் அவர் காவல்துறையினரால் நதிக்குள் இருந்து மீட்கப்பட்டார். 10 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Louis மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் இதே போன்ற சம்பவம் ஒன்றில் 25 வயதுடைய ஒருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan