Paristamil Navigation Paristamil advert login

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிரடி சட்டம்...!

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக அதிரடி சட்டம்...!

12 மாசி 2024 திங்கள் 08:02 | பார்வைகள் : 2958


மடகாஸ்கர் நாட்டில் குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். 

மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த ஆண்டு 600 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 சிறுமிகள்/குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசாங்கம் அதிரடி முடிவெடுத்துள்ளது.

அதன்படி, பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. 

குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் இன்று மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தை பெற்று பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது.

ஜனாதிபதி ஒப்புதல் அளித்த உடன் சட்டம் அமுலுக்கு வர உள்ளது. 

இந்த சட்டத்தின்படி, 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும்.

10 முதல் 13 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலமோ அல்லது ரசாயன முறையிலோ ஆண்மை நீக்கப்படும்.

14 முதல் 17 வயதிற்கு உள்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கப்படும்.

அதேவேளை ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் மடகாஸ்கர் அரசாங்கத்தில் தீர்மானத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்