Paristamil Navigation Paristamil advert login

மைக்ரோவேவ் ஓவனில் பச்சிளங் குழந்தையை  தூங்க வைத்த   தாய்! அதிர்ச்சி சம்பவம்

மைக்ரோவேவ் ஓவனில் பச்சிளங் குழந்தையை  தூங்க வைத்த   தாய்! அதிர்ச்சி சம்பவம்

12 மாசி 2024 திங்கள் 10:43 | பார்வைகள் : 7044


அமெரிக்காவின் மிசோரி மாகாணம் கன்சஸ் நகரை சேர்ந்தவர் மரிகா தாமஸ் (வயது 26). 

இவருக்கு ஒருமாத பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில்,  மரிகா தாமஸ் தனது குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து உணவை சூடுபடுத்த பயன்படும் மைக்ரோவேவ் ஓவனில் வைத்துள்ளார்.

மைக்ரோவேவ் ஓவன் செயல்பட்டுக்கொண்டிருந்த நிலையில் குழந்தையின் ஆடை மற்றும் குழந்தையை சுற்றிவைக்கப்பட்டிருந்த துணி வெப்பத்தால் கருகி எரிந்த புகை வாசனை வாசனை வருவது தொடர்பில் அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டின் மைக்கோவேவ் ஓவனில் படுகாயங்களுடன் குழந்தை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக குழந்தையை மீட்டு பரிசோதித்தனர்.

ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் குழந்தையின் தாயான மரிகா தாமசை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

முதற்கட்ட விசாரணையில் மரிகா தாமஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.

தொட்டிலில் தூங்க வைப்பதாக நினைத்து பெற்ற தாயே குழந்தையை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

வர்த்தக‌ விளம்பரங்கள்