Paristamil Navigation Paristamil advert login

சல்மான் கானை இயக்குகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்?

 சல்மான் கானை இயக்குகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்?

12 மாசி 2024 திங்கள் 10:43 | பார்வைகள் : 4521


தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவர் ஏஆர் முருகதாஸ். தமிழில் சில பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்தவர் ஹிந்தியில் ஆமீர்கான் நடித்த 'கஜினி' படத்தை இயக்கி அங்கு 100 கோடி வசூலை முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார். அதன்பின் ஹிந்தியில் அக்ஷய்குமார் நடித்த 'ஹாலிடே, சோனாக்ஷி சின்ஹா நடித்த 'அகிரா' ஆகிய படங்களை இயக்கினார்.

2018ல் வெளிவந்த 'தர்பார்' படத்தின் தோல்விக்குப் பிறகு கடந்த ஆறு வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்தார். விஜய் உள்ளிட்ட சில முன்னணி ஹீரோக்கள் கதை பிடிக்கவில்லை என அவரைப் புறக்கணித்தார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கப் போவதாக அறிவித்தார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை.

இந்நிலையில் பாலிவுட்டின் வசூல் நாயகனாக சல்மான் கான் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை ஏஆர் முருகதாஸ் இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தயாரிப்பாளரான சஜித் நடியத்வாலா அப்படத்தைத் தயாரிக்கப் போகிறாராம். வரும் கோடை விடுமுறையில் படப்பிடிப்பை ஆரம்பித்து அடுத்த வருடம் பக்ரித் பண்டிகையின் போது படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இத்தகவல் உறுதி என்றால் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்