BMW காரில் வந்து தயிர் வடை விற்கும் கோடீஸ்வரர்...
12 மாசி 2024 திங்கள் 12:45 | பார்வைகள் : 1876
BMW காரில் வந்து இறங்கிய கோடீஸ்வரர் ஒருவர் தெருவோரத்தில் கடை ஒன்றை போட்டு தயிர் வடை விற்கிறார்.
இந்திய தலைநகர் டெல்லி, நேரு பிளேஸ் பகுதியில் உள்ள சர்மாஜியின் கடையில் தஹி பல்லா சாப்பிடாமல் யாரும் போகமாட்டார்கள். இவரது கடையில் உள்ள தஹி பல்லா தனிச்சுவை கொண்டது என்பதால் எப்போதுமே இவர் கடையில் கூட்டமாகவே இருக்கும்.
தஹி பல்லா என்பது உளுந்து வடை செய்து அதனுடன் தயிர் மற்றும் சட்னி சேர்த்து பரிமாறும் உணவாகும். 1989 -ம் ஆண்டு முகேஷ் குமார் சர்மா என்பவர் முதன்முறையாக நேரு பிளேஸ் பகுதியில் தஹி பல்லாவை விற்பனை செய்தார். அது அப்போது ரூ.2க்கு விற்கப்பட்டது. தற்போது, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
காரில் வந்து விற்பனை: இவர் இதற்காக கடையை வாடகைக்கு எடுக்காமல் ஒரு வண்டியில் மேசைகளை கொண்டு வருகிறார். பின்னர் அதனை வழக்கமான விற்கும் இடத்தில் அதை போட்டு, வீட்டில் தயாரித்து வைத்த வடை, தயிர் மற்றும் மசாலா பொருட்களை அதன் மீது வைத்து கலந்து விற்பனை செய்வார்.
பின்பு, விற்பனை முடிந்ததும் அதனை வண்டியிலேயே எடுத்து வைத்து விட்டு வீடு திரும்புவார். இவரது கடின உழைப்பால் தற்போது கோடீஸ்வரர் ஆகிவிட்டார்.
சில சமயம் இவர் சொந்தமாக வைத்திருக்கும் BMW காரில் வந்து கடை அமைத்து தஹி பல்லா விற்பனை செய்கிறார். இவருடைய சாட் உணவிற்கு தனி ருசி இருப்பதால் தான் அதனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆனால், அதற்கு காரணம் அவருடைய மசாலா பொருட்கள் தான். அதனை அவர் ரகசியமாகவே வைத்துள்ளார். இவர், தற்போது கோடீஸ்வரர் ஆனாலும் வழக்கம் போல வந்து சாதாரணமாக கடை போடுவது வியப்பாக உள்ளது என்கின்றனர்.